சிலம்பாட்ட கழக மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

70பார்த்தது
சிலம்பாட்ட கழக மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
கள்ளக்குறிச்சியில் மாவட்ட சிலம்பாட்டக் கழக ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி வித்யாலட்சுமி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் துரைமணி தலைமை தாங்கினார். குமரிகண்ட தமிழர் தற்காப்பு பயிற்சி கூடம் குணசேகரன், கனிஷ்கா சிலம்பம் பயிற்சி கூடம் வாசுதேவன், கல்லை கலை கோவில் சிலம்பம் பயிற்சி கூடம் அருண் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செல்வம் வரவேற்றார். கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை விளையாட்டு போட்டிகள், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் சிலம்பம் போட்டிகளை நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆசான்கள், பயிற்சியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை வழங்கினர். தொடர்ந்து சூளாங்குறிச்சி கனிஷ்கா சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் கல்லை கலை கோவில் சிலம்பம் பயிற்சி பள்ளி ஆகியவற்றை கள்ளக்குறிச்சி மாவட்ட சிலம்பாட்ட கழகத்தில் இணைந்தனர். மாவட்ட பொருளாளர் பாலகுரு நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி