மூங்கில்துறைப்பட்டு: பாலம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

69பார்த்தது
மூங்கில்துறைப்பட்டு: பாலம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர் மட்ட பாலத்தை கண்காணிப்பு கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார். திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி வரை உள்ள இருவழிச் சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றி பணிகள் நடந்து வருகிறது. இதில், மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை நேற்று, திருவண்ணாமலை கண்காணிப்பு கோட்ட பொறியாளர் கிருஷ் ணசாமி ஆய்வு செய்தார்.


அப்போது, பணியின் தரம் குறித்தும், மழைக் காலம் துவங்க இருப்பதால் விரைந்து முடிக்கவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். கள்ளக்குறிச்சி கோட்டை பொறியாளர் நாகராஜன், உதவி பொறியாளர் சர்மா உடனிருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி