ஜூஸ் கடை உரிமையாளரை தாக்கியவர் கைது

67பார்த்தது
ஜூஸ் கடை உரிமையாளரை தாக்கியவர் கைது
ஜூஸ் கடை உரிமையாளரைத் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 58; இவர் ரோடுமாமாந்துார் பகுதியில் ஜூஸ் கடை வைத்துள்ளார். கடந்த 8ம் தேதி இரவு ரோடுமாமாந்துாரைச் சேர்ந்த இளங்கோவன் மகன் ரவிக்குமார், 26; ஜூஸ் கடைக்கு சென்று, என்னை கேட்காமல் எப்படி கடை வைக்கலாம் என கேட்டு, சண்முகத்தை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். சண்முகம் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து ரவிக்குமாரை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி