சின்னசேலம் அருகே சிக்கிய 3 லிட்டர்...!

2632பார்த்தது
சின்னசேலம் அருகே சிக்கிய 3 லிட்டர்...!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மூங்கில்பாடி, பாண்டியன்குப்பம், தண்ணீர் பந்தல் ஆகிய கிராமங்களில் சாராயம் விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக், தனிப்பிரிவு போலீசார் கணேசன் தலைமையிலானோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது மூங்கில்பாடி கிராம எல்லையில் ஒருவர் சாராயம் விற்பனை செய்து வந்தவரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் பாண்டியன் குப்பம் கிராமத்தைச் சுப்பிரமணி மகன் கோவிந்தராஜ் என்பது தெரிய வந்தது.

பின்னர் அவரிடம் இருந்து 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி