ஜூன் 4 மோடியின் ஆட்டம் முடியும்.. திருமாவளவன்

61பார்த்தது
ஜூன் 4 மோடியின் ஆட்டம் முடியும்.. திருமாவளவன்
இட ஒதுக்கீட்டுக்கும், சமூக நீதி கோட்பாட்டிற்கும் எதிரானவர்கள் இந்த நாட்டை ஆள்கிறார்கள். சமூக நீதி, அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆதரவானவர்கள் அதற்கு எதிரானவர்கள் இடையே தான் இந்த மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி பேசி வரும் கருத்துக்கள் அவர் பதட்டத்திற்கு உள்ளாகிறார் என காட்டுகிறது. ஜூன் 4-ம் தேதியோடு பிரதமர் மோடியின் ஆட்டம் முடிவடைய உள்ளது என சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி