ஜூன் 4 மோடி விடுவிக்கப்பட்ட தினம்: காங்கிரஸ் பதிலடி

75பார்த்தது
ஜூன் 4 மோடி விடுவிக்கப்பட்ட தினம்: காங்கிரஸ் பதிலடி
ஜூன் 25-ந்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அமித் ஷா குறிப்பிட்டிருந்த நிலையில், காங்கிரஸ் தலைவரான ஜெய்ராம் ரமேஷ் ஜூன் 4 மோடி விடுவிப்பு தினம் என பதிலடி அளித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "10 வருடங்கள் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அமல்படுத்தியிருந்த பிரதமர் மோடிக்கு இந்திய மக்கள் தீர்க்கமான தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக தோல்வியை வழங்கிய 2024 ஜூன் 4-ந்தேதி வரலாற்றில் மோடி விடுவிக்கப்பட்ட தினம்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி