ஜே.பி.நட்டாவின் திருச்சி 'ரோட் ஷோ': உயர்நீதிமன்றம் அதிரடி

70பார்த்தது
ஜே.பி.நட்டாவின் திருச்சி 'ரோட் ஷோ':  உயர்நீதிமன்றம் அதிரடி
திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா பங்கேற்க இருந்த ரோடு ஷோவுக்கு அரசு அனுமதி மறுத்திருந்த நிலையில், மாற்றுப் பாதையில் பேரணி செல்ல அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை ‘ரோட் ஷோ’ செல்ல பாஜக அனுமதி கோரியிருந்தது. ஆனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாதையில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று அரசு அனுமதி மறுத்திருந்தது. இந்த நிலையில், கண்ணப்பா ஹோட்டல் முதல் இஎஸ்ஐ மருத்துவமனை வரை பேரணி நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.