JEE முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!

1174பார்த்தது
JEE முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!
2023 ஆம் ஆண்டிற்கான JEE முதன்மை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. என்ஐடி, ஐஐடியில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு JEE நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், JEE முதன்மை தேர்வை எழுதியவர்களில் 43 பேர் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, JEE முதன்மை தேர்வு முடிவுகளை jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும், JEE தேர்வில் தகுதி பெற்றவர்கள் என்ஐடி, ஐஐஐடி போன்ற நிறுவனங்களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளில் சேரலாம்.

தொடர்புடைய செய்தி