தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி மிகச்சிறந்த மனிதர் என நடிகை பூமிகா தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி கோபப்பட்டு பார்த்ததே இல்லை எனவும், பழகுவதற்கு அவரை போல் நல்ல மனிதர் யாரும் இருக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது 90% இளைஞர்கள் செல்போனில் தான் அதிகம் அரட்டை அடிக்கிறார்கள், ஜெயம் ரவி அப்படி இருக்க மாட்டார், வாழ்க்கை துணை தப்பா இருந்தால் எதுவும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.