ஜல்லிக்கட்டு முதல் பரிசாக மஹிந்திரா தார் கார்?

563பார்த்தது
ஜல்லிக்கட்டு முதல் பரிசாக மஹிந்திரா தார் கார்?
நாளை தமிழக அரசு சார்பில் கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த விழாவில் கலந்துகொள்ள உள்ளார். இதில் 500 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெரும் காளைக்கும், சிறந்த வீரருக்கும் மஹிந்திரா தார் காரை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி