வெல்லம் விலை மூட்டைக்கு ரூ.30 சரிவு

58பார்த்தது
வெல்லம் விலை மூட்டைக்கு ரூ.30 சரிவு
ஈரோடு அடுத்த சித்தோடு வெல்ல மார்க்கெட்டில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏலம் மூலம் வெல்ல மூட்டைகள் (30 கிலோ) விற்பனை செய்யப்படும். இதன்படி, இந்த வாரம் கூடிய மார்க்கெட்டில் நாட்டுசர்க்கரை 3,100 மூட்டையும், உருண்டை வெல்லம் 3,400 மூட்டையும், அச்சு வெல்லம் 350 மூட்டையும் வரத்தானது. இதில், நாட்டுச்சர்க்கரை மூட்டை ஒன்று ரூ.1,250 முதல் ரூ.1,370 வரையும், உருண்டை வெல்லம் ரூ.1,300 முதல் ரூ.1,4,10 வரையும், அச்சு வெல்லம் ரூ.1,300 முதல் ரூ.1,380 வரை என்ற விலையில் விற்பனையானது.

கடந்த வாரத்தை விட நாட்டுச்சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால், நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் போன்றவை மூட்டைக்கு ரூ.30 வரை விலை சரிந்து விற்பனையானதாக மார்க்கெட் நிர்வாகம் தெரிவித்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி