திருச்சியில் இன்று 108 டிகிரி வெப்பம் கொளுத்தியது

74பார்த்தது
திருச்சியில் இன்று 108 டிகிரி வெப்பம் கொளுத்தியது
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக திருச்சியில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர். பாளையங்கோட்டை, கரூரில் தலா 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. திருவள்ளூரில் வெயில் தாக்கம் வெகுவாக குறைந்து இன்று 99 டிகிரி ஃபாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது. கத்திரி வெயில் தொடங்கிய மே 4-ல் தருமபுரியில் 106 டிகிரி பதிவான வெயில் தற்போது 95 டிகிரி ஃபாரன்ஹீட் கீழ் சென்றது. வரும் நாட்களில் வெப்பம் சற்று குறைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி