பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அங்கு, அவர் பேச வாய்ப்பு கொடுக்காததால் அவர் பாதியில் வெளிநடப்பு செய்தார். இதுகுறித்து பாஜக பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் மற்றும் பாஜகவின் ஐடி துறை தலைவர் அமித் மால்வியா ஆகியோர் கூறியதாவது, "கேமராக்களுக்காக திட்டமிட்டே ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்துள்ளார்” என தெரிவித்தனர்.