கோவை பொறியியல் கல்லூரியில் மாணவரை ராகிங் செய்ததாக சக மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஒழுக்கமில்லாமல் கல்வி பெறுவதால் எந்த அர்த்தமும் இல்லை. ராகிங்கில் ஈடுபடுவதாக இருந்தால், கல்லூரிக்கு செல்ல வேண்டிய நோக்கம் என்ன? அதற்கு படிக்காமல் இருப்பதே நல்லது என காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களை எச்சரித்து வழக்கை ரத்து செய்து தீர்ப்பளிக்கப்பட்டது.