நடிகர் அஜித்குமார் தனது பயண அனுபவத்தை பற்றி பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், “பயணம் என்பது சிறந்த கல்விகளில் ஒன்று. 'மதமும் சாதியும் நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட வெறுக்க வைக்கிறது’ என்று ஒரு கூற்று உண்டு. அது உண்மைதான். ஒருவரை நாம் சந்திப்பதற்கு முன்பே அவர்களை மதிப்பீடு செய்கிறோம். ஆனால் நீங்கள் பயணம் செய்யும் போது வெவ்வேறு தேசம், மதம், கலாச்சாரம் கொண்ட மனிதர்களை சந்திப்பீர்கள், அது உங்களை சிறந்த நபர் ஆக்கும்" என பேசியுள்ளார்.