இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும்
போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட
போர் சூழல் நிலவி வரும் நிலையில், நேற்றைய தினம்
அதானி போர்ட்ஸ் பங்குகள் 4.89% வரை சரிவை சந்தித்துள்ளது.
அதானி போர்ட்ஸ் சொந்தமான ஹைஃபா துறைமுகம் இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், அந்நாட்டில் உள்ள இந்திய முதலீடுகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நிலவும் உச்சக்கட்ட போரில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.