மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த நிதியும் வழங்கவில்லை தமிழ்நாடு என்ற பெயரே குறிப்பிடவில்லை என பல்வேறு கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றன்ர. இந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “பட்ஜெட்டில் ‘தமிழ்நாடு' என்ற பெயர் வராததெல்லாம் ஒரு பிரச்சனையா? கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், டெல்லி என எந்த மாநிலத்து பெயரும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை” என்றார்.