நீரிழப்பைத் தடுக்க நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். உடல் நலத்திற்கு நல்லது என நினைத்து இயந்திரத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் அதிகமாக குடித்தால் அது உண்மையில் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஓவர் ஹைட்ரேஷன் பிரச்சனை வரும். அதாவது, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, எலக்ட்ரோலைட்டுகளின் அளவு மாறுகிறது. இதனால் குழப்பம், வாந்தி, தசை பலவீனம், வலிப்பு மற்றும் தலைவலி ஏற்படுகிறது.