தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை (ஜூன் 10) திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் பள்ளிகளில் கல்வி சாரா செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இலக்கிய மன்றம், தனித்திறன் பயிற்சி வகுப்புகள், 1 மணி முதல் 1.20 வரை சிறார் இதழ்கள் வாசித்தல் என்ற பாடவேளை, இலக்கிய மன்றம், வினாடி வினா, சுற்றுச்சூழல் மன்றம், கலை, கைவண்ணம், இசை, வாய்ப்பாட்டு பாடவேளை, தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் என மாணவர்களின் கல்வி சாரா செயல்பாடுகளுக்கு வாரத்திற்கு 16 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.