புகைப்பழக்கத்தால் தொண்டைக்குள் வளரத் தொடங்கிய முடி

64பார்த்தது
புகைப்பழக்கத்தால் தொண்டைக்குள் வளரத் தொடங்கிய முடி
ஆஸ்திரியாவைச் சேர்ந்த 52 வயது நபர் ஒருவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கத்தால் தொண்டைக்குள் முடி வளரத் தொடங்கியுள்ளது. நீண்ட கால புகைப்பழக்கத்தால் எழக்கூடிய வினோதமான நோய் இதுவாகும். 2007ம் ஆண்டு தொண்டைக்குள் வீக்கம் மற்றும் முடிகள் வளர்வதை கண்ட அவர் மருத்துவரை அணுகினார். புகைப்பழக்கத்தை கைவிடும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியும், அவர் விடாததால் முடிகள் வேகமாக வளரத் தொடங்கியுள்ளது. 2022ம் ஆண்டு புகைபழக்கத்தை நிறுத்திய அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை மூலம் நிரந்தரமாக மருத்துவர்கள் முடியை நீக்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி