தேசிய தேர்வு முகமை 12 தேர்வுகளை சிதைத்துள்ளது- திமுக எம்.பி. வில்சன்

56பார்த்தது
தேசிய தேர்வு முகமை 12 தேர்வுகளை சிதைத்துள்ளது- திமுக எம்.பி. வில்சன்
தேசிய தேர்வு முகமை தொடங்கப்பட்டதில் இருந்து நீட், நெட், கியூட் உள்ளிட்ட 12 தேர்வுகளை சிதைத்துள்ளதாக திமுக எம்.பி. வில்சன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தள பக்கத்தில், "மாணவர்கள் நலன் கருதி தேசிய தேர்வு முகாமைக்கு சட்டப்பூர்வ ஆதரவு வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்ற ஒன்றிய அரசு எந்தவிதமான ஆர்வமும் காட்டவில்லை. தேசிய தேர்வு முகமை குடியிருப்பு சங்கங்களை போன்று செயல்படுகிறது. தேசிய தேர்வு முகமை தொடங்கப்பட்டதில் இருந்து நீட், நெட், கியூட் உள்ளிட்ட 12 தேர்வுகளை சிதைத்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி