இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்று (அக்டோபர் 17) நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் 5 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “அணியின் கேப்டனாக 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பது என்னுடைய முடிவே” என்றார். 50 ரன்களுக்கும் குறைவான ஸ்கோர் எடுத்தது இதுவே முதல் முறையாகும்.