இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று (ஜுலை 30) நடைபெறவுள்ளது. இந்திய அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. மறுபுறம், ஒரு போட்டியை வென்று கௌரவத்தை தக்கவைக்க இலங்கை ஆர்வமாக உள்ளது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் எந்த மாற்றமும் இல்லாமல் களம் இறங்க வாய்ப்புள்ளது. இந்தப் போட்டி பல்லேகல மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.