மூவர்ண இட்லி: தேசியக் கோடி போல மூன்று வண்ணங்களில் கேரட் இட்லி, புதினா இட்லி மற்றும் வெறும் இட்லியை செய்து சாப்பிடலாம். மூவர்ண சப்பாத்தி: பாலக் கீரை போட்ட பாலக் சப்பாத்தி, சாதரண சப்பாத்தி மற்றும் கேரட் சாறு கலந்த கேரட் சப்பாத்தி செய்து சாப்பிடலாம். மூவர்ண கலவை சாதம்: தேசியக் கொடியில் இருக்கும் காவி நிறத்திற்கு குங்கும பூ சாறு கலந்த பட்டாணி புலாவ் செய்யலாம், வெள்ளை நிறத்திற்கு தேங்காய் பால் சாதம் மற்றும் பச்சை நிறத்திற்கு புதினா சாதம் செய்யலாம்.