ராமர் கோவில் திறப்பு.. 30 ஆண்டு மௌனம் கலைத்த பெண்

565பார்த்தது
ராமர் கோவில் திறப்பு.. 30 ஆண்டு மௌனம் கலைத்த பெண்
அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படவுள்ளதால் தனது 30 ஆண்டு கால மௌன விரதத்தை ஒரு மூதாட்டி கலைக்கவுள்ளார். 85 வயது மூதாட்டியான சரஸ்வதி தேவி அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் வரை நான் மௌன விரதம் இருக்கப்போவதாக 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு நடந்த சமயத்தில் சபதமெடுத்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டில் மவுன விரதத்தை பகுதியாக முடித்துக் கொண்ட அந்த மூதாட்டி, தினமும் மதியம் 1 மணி நேரம் மட்டும் பேசி வந்தார். ஆனால், ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நாளில் இருந்து மீண்டும் மவுன விரதத்தை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார். தற்போது ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்படவுள்ளதால் அங்கு சென்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி