பணமோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஜார்க்கண்ட் காங்கிரஸ் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஞ்சியில் உள்ள பிர்சமுண்டா மத்திய சிறையில் இருந்து முதல்வர் சம்பாய் சோரனுக்கு கடிதம் எழுதினார். கேபினட் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், ஆலம்கீர் ஆலம் ஜார்க்கண்ட் சிஎல்பி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.