யுபிஐ பயனர்களுக்கு RBI-யின் முக்கிய செய்தி

65பார்த்தது
யுபிஐ பயனர்களுக்கு RBI-யின் முக்கிய செய்தி
UPI லைட் சேவை தற்போது பயனர்கள் தங்கள் வாலட்டில் ரூ.2,000 வரை ஏற்றவும். ரூ.500 வரை பணம் செலுத்தவும் உதவுகிறது. ஆனால் இப்போது இது மாறப்போகிறது. முன்மொழியப்பட்ட ஒருங்கிணைப்பின் கீழ், பயனர்கள் தங்கள் UPI லைட் வாலட்டிற்கான தானாக நிரப்புதல் அம்சத்திலிருந்து பயனடைவார்கள். அதாவது, வாலட் இருப்பு, பயனரின் நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குக் கீழே சென்றால், அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் தானாகவே மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுபிஐ லைட்டை இ-மேண்டேட் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு இல்லாத டிஜிட்டல் பேமெண்ட்டுகளுடன் சிறிய மதிப்பு பரிவர்த்தனை சேவைகளை மேம்படுத்துவதே ஆர்பிஐயின் இலக்கு ஆகும்.

தொடர்புடைய செய்தி