நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் கடன் பெறுதலில் பெண்களின் பங்கு 44% அதிகமாக உள்ளது. தமிழ்நாடு (44%), ஆந்திரப் பிரதேசம் (41%), தெலுங்கானா (35%), கர்நாடகா (34%) போன்ற தென் மாநிலங்களில் குறைந்தபட்சம் ஒரு நேரடிக் கடனையாவது கொண்டுள்ள பெண்களின் பங்கு அதிகமாக உள்ளது. 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி நாடு முழுவதுமான ஒட்டுமொத்த அளவு 31% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.