செப்.01ஆம் தேதி உலக கடித தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கையால் எழுதும் முறையை பாராட்டும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. செல்போன், இணையம் வருவதற்கு முன்பு ‘நலம் நலமறிய ஆவல்’, ‘நான் இங்கு சுகம்! நீ அங்கு சுகமா?’, ‘யாவரும் நலம்’ மாதிரியான நமது உணர்ச்சிகளை எல்லாம் கடிதத்தின் வழியே கடத்தினோம். ஆனால் டெக்னாலஜி வளர வளர கடிதம் எழுதும் முறை குறைந்துவிட்டது. நீங்கள் கடைசியாக எப்போது கடிதம் எழுதினீர்கள் என கமெண்ட் பண்ணுங்க!