அமைச்சரை சிறையில் அடைப்பேன்.. பரபரப்பு பேட்டி

67547பார்த்தது
அமைச்சரை சிறையில் அடைப்பேன்.. பரபரப்பு பேட்டி
எனக்கு முன் போல் அதிகாரம் இருந்தால் அறநிலையத்துறை அமைச்சர் உட்பட அனைவரையும் சிறையில் தூக்கி உள்ளே வைத்துவிடுவேன் என முன்னாள் சிலைகடத்தல் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழமையான கோவில்கள் பல கேட்பாரற்று கிடக்கிறது அதனை சரி செய்யவேண்டும் என கூறிய அவர், செத்த பூனை போல் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு வேலை பார்க்க கூடாது என கூறியுள்ளார். நல்ல அதிகாரிகளை, உத்தமர்களை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகளாக போட வேண்டும். காவல்துறையில் உள்ள நல்ல அதிகாரிகளை முக்கிய பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும் என கூறினார்.