அமெரிக்க அதிபர் தேர்தலில் 15 மாகாணங்களில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 7 மாகாணங்களில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார். டிரம்ப் இதன்மூலம் அமெரிக்காவின் 47வது அதிபரானார். அவர் கூறுகையில், "இதுவரை யாரும் காணாத வகையில் ஒரு இயக்கத்தை நடத்தி வெற்றி வாகை சூடியுள்ளோம். அமெரிக்காவை மேலும் மகத்தான நாடாக மாற்றுவேன். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும்” என்றார்.