தெலங்கானாவின் ஹைதராபாத்தில் கடந்த திங்கள் (நவ. 04) இரவு 50 வயதான பெண் பேருந்து நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்தார். அவரை அணுகிய மூன்று ஆண்கள் தங்கள் வீட்டில் உள்ள துணியை துவைத்து கொடுத்தால் ரூ. 500 பணம் கொடுப்பதாக கூற, அவர்களுடன் அப்பெண் சென்றார். அங்கு மூன்று பேரும் அவரை கூட்டு பலாத்காரம் செய்த பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் குற்றவாளிகளை தேடுகின்றனர்.