ஒவ்வொரு பெண்ணும் குறைந்தபட்சம் 2 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார். சட்டப்பேரவையில் நேற்று (மார்ச் 13) உரையாற்றிய அவர், குழந்தை பெறுவது குறித்து கிராமங்கள் மற்றும் தொகுதிகளில் விவாதங்களை நடத்தி வெளிப்படையாக பேச வேண்டும். இதை ஊக்குவிக்க தேவைப்பட்டால் வீடுகள் கண்காணிக்கப்படலாம் என பேசியதால் பேரவையில் உறுப்பினர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.