சந்திரபாபுவின் பாடல்களுக்கு அழிவே கிடையாது. குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே, உனக்காக எல்லாம் உனக்காக, பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே, நானொரு முட்டாளுங்க, பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது, புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, சிரிப்பு வருது சிரிப்பு வருது, தடுக்காதே என்னை தடுக்காதே போன்ற பாடல்கள் 50 ஆண்டுகளையும் கடந்து இன்னும் இசை நெஞ்சங்களின் மனதில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.