பட்டு புடவைகள் பல வகைகளில் தயாரிக்கப்படுகிறது. அதில் எது அசல் பட்டு, எது போலி என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு போலி புடவைகள் சந்தைகளில் அதிகம் வலம் வருகிறது. பட்டு நூலை புடவையின் முனையிலிருந்து வெட்டி எடுத்து, நெருப்பில் பொசுக்கிப் பார்த்தால் சாம்பல் ஆகிவிடும். சாம்பல் ஆகாமல் மெழுகு போல உருகி, ஒரு பிளாஸ்டிக் ஒயரை பற்ற வைத்தது போல வாசம் வீசினால் அது போலியான பட்டு நூல் என உறுதிப்படுத்தலாம்.