அதிக பணிச்சுமை, ஊக்கத்தொகை சார்ந்த சிக்கல்கள், சமூக ஆதரவு இல்லாமல் போவது போன்றவை பணியிடத்தில் மன அழுத்தம் ஏற்பட பொதுவான காரணங்களாகும். பணியிடத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து மேற்பார்வையாளரிடம் வெளிப்படையாக பேசி தீர்வு காணலாம். எந்தவிதமான பணிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டால் பிரச்சனை ஏற்படாது. தொடர்ச்சியாக பணியில் மூழ்காமல் நண்பர்களுடன் குறுகிய உரையாடலில் ஈடுபடலாம்.