குக்கரிலும் சைக்கிளிலும் எத்தனை எம்.பி, எம்.எல்.ஏ உள்ளனர்?

39744பார்த்தது
குக்கரிலும் சைக்கிளிலும் எத்தனை எம்.பி, எம்.எல்.ஏ உள்ளனர்?
குக்கரிலும், சைக்கிளிலும் எத்தனை எம்.பி, எம்.எல்.ஏ உள்ளனர் என நாகை விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், பம்பரம் கேட்ட மதிமுகவுக்கு 2 தொகுதியில் போட்டியிட்டால் தருவோம் என்றது தேர்தல் ஆணையம். 2-க்கு மேல் போட்டியிடும் விசிக பானை கேட்டால் 1% வாக்கு வேண்டும் என்கிறது. அதை பெற்றுள்ளோம் என்றாலும் தர மறுக்கிறது.

பானையில் 1 எம்.பி., 4 எம்.எல்.ஏ, உள்ளோம். குக்கரிலும் சைக்கிளிலும் எத்தனை எம்.பி, எம்.எல்.ஏ, உள்ளனர்? என ஷாநவாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி