கார்த்திகை தீபத்தில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்?

78பார்த்தது
கார்த்திகை மாதத்தில் வீடுகளிலும், கோயில்களிலும் தீபமேற்றி வழிபடுவது காலம் காலமாக நடைபெற்று வரும் நிகழ்வாகும். இறைவன் ஜோதி வடிவாக காட்சியளித்த நாளே கார்த்திகை மாத பௌர்ணமி நாளாகும். இந்த தினத்தில் இல்லத்தில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 தீபம் ஏற்றுவது சிறப்பான ஒன்றாகும். இல்லங்களில் தீபம் ஏற்றினால் இருள் அகன்று ஒளிமிகுந்த வாழ்க்கையை பெற முடியும். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பதும் ஐதீகம்.

தொடர்புடைய செய்தி