11ஆம் தேதி வரை ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

77பார்த்தது
11ஆம் தேதி வரை ஊட்டி மலை ரயில் சேவை ரத்து
கனமழை எச்சரிக்கை காரணமாக ஊட்டி மலை ரயில் 11ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கனமழை எச்சரிக்கை காரணமாகவும், மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாலும் 11ஆம் தேதி வரை மலை ரயில் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டிக்கு சுற்றுலா வந்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு இது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி