ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சோதனை

75பார்த்தது
ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சோதனை
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டியதாகக் கூறப்படும் பணமோசடி வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, ஜார்க்கண்ட் முதலமைசச்ர் ஹேமந்த் சோரனுடன் தொடர்புடைய இடங்களில் புதன்கிழமை காலை அமலாக்க இயக்குனரகம் ராஞ்சியில் சோதனை நடத்தியது. ஹேமந்தின் பத்திரிகை ஆலோசகர் அபிஷேக் பிரசாத் வீடு, சாஹேப்கஞ்ச் துணை கமிஷனர் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அமலாக்க இயக்குனரகம் வழங்கிய சம்மனை ஹேமந்த் சோரன் அலட்சியப்படுத்தியதால் திடீர் சோதனை நடத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி