பெண் பயணிகளுக்கு உதவி எண் - மெட்ரோ அறிவிப்பு

61பார்த்தது
பெண் பயணிகளுக்கு உதவி எண் - மெட்ரோ அறிவிப்பு
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 155370 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது ஏதேனும் உடனடி தேவை ஏற்பட்டால் 155370-ஐ அழைக்கலாம் என்றும் புகார் குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தற்காப்பு பயிற்சி பெற்ற பெண்கள் அணியை மெட்ரோ நிர்வாகம் பணியமர்த்தியது குறிப்பிடத்தக்கது.