சென்னை உட்பட 12 மாவட்டங்களில் நாளை கனமழை

1889பார்த்தது
சென்னை உட்பட 12 மாவட்டங்களில் நாளை கனமழை
சென்னை உட்பட 12 மாவட்டங்களில் நாளை கனமழை உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் நாளை (ஜன.7) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை
மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி