இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

129329பார்த்தது
இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கடலூர், மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாகவே உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாகவே ஜனவரியில் வடகிழக்கு பருவமழை தொடர்கிறது. 2 நாட்களுக்குப் பிறகு மழை படிப்படியாக குறையும், தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றார்.

தொடர்புடைய செய்தி