"உலக சாம்பியனை வென்றவர் சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்"

63பார்த்தது
"உலக சாம்பியனை வென்றவர் சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்"
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாகை சூடி பெண் சிங்கமாக திகழ்கிறார் வினேஷ் போகட் என இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் அவர், "காலிறுதியில் 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையை வினேஷ் போகட் வீழ்த்தியுள்ளார். ஆனால், இவரை சொந்த நாடே உதறித்தள்ளியது. தெருக்களில் தரத்தரவென இழுத்துச்சென்றது. இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார். ஆனால், சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்" என காட்டமாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி