டெல்லி அணியில் இனி இவருக்கு பதில் இவர்

73பார்த்தது
டெல்லி அணியில் இனி இவருக்கு பதில் இவர்
நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாரி ப்ரூக்குக்குப் பதிலாக மாற்று வீரரை டெல்லி கேப்பிடல்ஸ் அறிவித்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் அண்மையில் அறிவித்தார். எனவே நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் ஹாரி ப்ரூக்குப் பதிலாக மாற்று வீரராக தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் லிஸாத் வில்லியம்ஸ் அணியில் இணைந்துள்ளார். 30 வயதாகும் லிஸாத் வில்லியம்ஸ் தென்னாப்பிரிக்க அணிக்காக 2 டெஸ்ட், 4 ஒருநாள் போட்டிகள் மற்றும் 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி