தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 2024-25 கல்வி ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28ஆம் முதல் தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. செய்முறை தேர்வுகள் பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. தேர்வு நாள் விரைவில் நெருங்கும் நிலையில், தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று (மார்ச் 14) வெளியாகிறது. அதனை, http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.