அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன் மாப்பிள்ளை எனக் கூறியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது. இன்று (மார்ச்.25) நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் கருப்பண்ணன் செந்தில் பாலாஜியிடம் கோரிக்கை வைக்கும்போது 'மாப்பிள்ளை' என அழைத்தார். இதை கேட்டவுடன் சபாநாயகர் அப்பாவு உட்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டென சிரித்தனர். அதன்பின் சுதாரித்த கருப்பண்ணன் பழக்க தோஷத்தில் வந்துவிட்டது SORRY SORRY எனக்கூறினார்.