உடலில் நச்சுத்தன்மையை அதிகரிக்கும் பச்சை மிளகாய்

70பார்த்தது
உடலில் நச்சுத்தன்மையை அதிகரிக்கும் பச்சை மிளகாய்
பச்சை மிளகாயை சேர்ப்பதால் உணவிற்கு தனிசுவையைத் தருவதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. என்ன தான் நன்மைகளை கொண்டாலும் அதிகம் சாப்பிட்டால் பக்க விளைவுகளும் உண்டு. பச்சை மிளகாயை சாப்பிடுவதால் தீவிர எரிச்சல் உணர்வு உண்டாகும். அது வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்தும். சிலருக்கு வயிற்று வலி அல்லது வலியுடன் கூடிய வயிற்றுப்போக்கு ஏற்படும். உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருந்தால் அதை மேலும் அதிகப்படுத்தும். பச்சை மிளகாயை அதிகம் சாப்பிடுவது உடலில் நச்சுத்தன்மையை அதிகரிக்கும்.

தொடர்புடைய செய்தி