காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு நிலைநாட்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். காவிரி விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்க வேண்டும். கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடி சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காவிரி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை அரசு நிலைநாட்டும் என்று கூறியுள்ளார்.