4 பவுன் தங்கம் விலை தற்போது இருக்கும் விலையை விட ரூ.17,000 வரை உயர வாய்ப்புகள் உள்ளன. அதாவது கிட்டத்தட்ட ஒரு பவுன் தங்கம் ரூ.4000 வரை இந்த வருடம் உயரும் வாய்ப்புகள் உள்ளன என கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தற்போது வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இந்த முடிவு டாலரை பலவீனப்படுத்தியுள்ளது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டத் தொடங்கியுள்ளது. இனியும் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.